#GoBackModi ட்விட்டர் டிரெண்டிங்குக்கு காரணம் காங்கிரஸும்,இவங்களும் தான் …!பிக் பாஸ் ஹவுஸ் மேட் ஆதங்கம் …!

Default Image

காயத்ரி ரகுராம், பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackModi ட்விட்டர் டிரெண்டிங்குக்கு காங்கிரஸும், ரம்யாவுமே காரணம் என்று  பதிவிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

Image result for divya spandana congres

வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்தும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் உலகளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Image result for divya spandana congres

இதுகுறித்து நடன இயக்குனரரும், பாஜக உறுப்பினருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மோடி நமக்கு உதவில்லை என்றால்? வேறு யார் நமக்கு உதவுவார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விருந்து நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார்.

Image result for gayathri

காங்கிரஸும், ரம்யாவுமே போலியான போராட்டக்காரர்களை விலைக்கு வாங்கி மோடிக்கு எதிராக பதிவிட வைக்கிறார்கள். ரம்யா, ராகுலின் சிறந்த நண்பர். அவர்தான் காங்கிரஸின் சமூக வலைதளங்களை கையாள்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்