கோட் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும்! பில்டப் ஏற்றி விட்ட பிரபலங்கள்!
சென்னை : கோட் படம் உலகம் முழுவதும் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என வைபவ், பிரேம் ஜி, ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : கோட் படம் உலகம் முழுவதும் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என வைபவ், பிரேம் ஜி, ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கோட் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு படம் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க அதிகமாகிக்கொண்டே செல்கிறது. விஜய் ரசிகர்கள் அனைவரும் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதியை நோக்கி தான் காத்துகொண்டு இருக்கிறார்கள். படத்தில் என்னதான் இருக்கிறது? என்கிற அளவுக்கு ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கும் நிலையில், படத்தை பற்றி பிரபலங்கள் பலரும் படம் பற்றி பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி ஆகியோர் படங்கள் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என கூறி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.
பிரேம் ஜி
படத்தின் ப்ரோமோஷனுக்காக யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது பிரேம் ஜி ” படத்தை நான் பார்த்துவிட்டேன். படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் பயங்கர சர்ப்ரைஸ் காட்சிகளாகவே இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் இந்த அளவுக்கு சர்பர்ஸ் காட்சிகள் எந்த படத்திலும் இடம்பெற்றதே இல்லை. படத்தை பார்த்துவிட்டு நான் சொன்னேன். படம் கண்டிப்பாக உலகம் முழுவதும் 1,500 கோடி வரை வசூல் செய்யும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் கோட் படம் தான் இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த படங்களில் ஒன்றாக இருக்கும். விஜய் படங்களின் வசூலை விஜய் படம் தான் முறியடிக்கும்” எனவும் பிரேம் ஜி கூறியுள்ளார்.
வைபவ்
அவரை தொடர்ந்து பேசிய வைபவ் “கோட் படத்தை பார்த்துவிட்டேன் படம் எந்த அளவுக்கு அருமையாக இருக்கிறது என்பதை என்னால் சொல்லவே முடியவில்லை. அந்த அளவுக்கு அருமையாக இருக்கிறது. நிச்சியமாக தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் செய்த படமாக கோட் படம் இருக்கும். படத்தை கண்டிப்பாக திரையரங்கிற்கு வந்து பாருங்கள். அணைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தது போல இருக்கும்” எனவும் வைபவ் தெரிவித்துள்ளார்.