உலகம் முழுவதும் ரிலீசான ‘GOAT’ : ஆட்டம் பட்டத்துடன் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்!
கோட் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
சென்னை : விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த ‘GOAT’ படம் இன்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், கேரளா, தெலுங்கானா, பெங்களூர் ஆகியவற்றில் 4 மணிக்கே அனுமதி அளிக்கப்பட்டது.
எனவே, அதிகாலை முதலே விஜய் ரசிகர்கள் பலரும் திரையரங்குகளின் வாசலில் பேனருக்குப் பால் அபிஷேகம் செய்து, வெடி வெடித்துக் கொண்டாடி வருகிறார்கள். கேரளாவைத் தொடர்ந்து, தமிழகத்தில் படத்தின் முதல் நாள் முதல் காட்சி 9 மணிக்குத் தொடங்கப்பட்ட நிலையில், தமிழகத்திலும் ரசிகர்கள் திரையரங்குகளில் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.
படத்தினை பார்த்துவிட்டு மக்கள் பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் படம் வெளியாவதையொட்டி நடிகர் விஜய் ரசிகர்களுக்குக் கட்டளை போட்டிருந்தார். பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படும் வகையில் எந்த செயலையும் செய்யக்கூடாது, எனவும் ‘GOAT’ படத்தைக் கொண்டாடும்போது எந்த காரணத்துக்காகவும் கட்சிக் கொடியைப் பயன்படுத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டு இருந்தார். இருப்பினும் கேரளாவில், அதிகாலை முதல் ரசிகர்கள் கட்சி கொடியை வைத்து படத்தினை கொண்டாடி வருகிறார்கள்.
எத்தனை திரையில் ரிலீஸ்?
விஜய் படம் என்பதால் தமிழ்நாட்டைத் தாண்டி மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் ‘GOAT’படத்தின் மீது எதிர்பார்ப்புகள் இருந்தது. எனவே, GOAT படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் உலகம் முழுவதும் மொத்தமாக 5,000 திரைகளிலும், தமிழகத்தில் மட்டும் 1,000 திரைகளிலும் ரிலீஸ் ஆகியுள்ளது. எதிர்பார்த்ததை விட உலகம் முழுவதும் ‘GOAT’ படத்திற்கு ரசிகர்களால் வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல் நாள் வசூல் கணிப்பு
GOAT படத்தின் முதல் நாள் வெளியீட்டிற்கு முன்பு வரை புக் மை ஷோ (BookMyShow)- வில் புக் ஆகியுள்ள டிக்கெட் அடிப்படையில் படம் எவ்வளவு கோடி வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதன்படி, ‘GOAT’ படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.