மைக் மோகன்: கோட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் மோகன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது கோட் படம் பற்றி பேசி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறார். இது குறித்து பேசிய நடிகர் மைக் மோகன், “நான் சமீபத்தில் கோட்படத்தின் படப்பிடிப்பிற்காக ஸ்ரீலங்காவிற்கு சென்றேன்.
படம் மிகவும் அருமையாக உருவாகி வருகிறது கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் விருந்தாக அமையும். கோட் படத்தில் நான் தாடி வைத்துக் கொண்டு நடித்து வருகிறேன். என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் இதற்கு முன்னதாக வெங்கட் பிரபு என்னை அவருடைய படத்தில் நடிக்க அணுகி இருக்கிறார்.
ஆனால் என்னால் அப்போது முடியாமல் போனது இந்த படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரமும் சரியான கால் சீட்டும் கிடைத்ததால் படத்தில் நடித்திருக்கிறேன். விஜய் மிகவும் எளிமையாக பழகும் நபர் கோட் படப்பிடிப்பு மிகவும் ஜாலியாக இருந்து வருகிறது”, என்று அவர் கூறியுள்ளார். விஜய் நடித்துள்ள கோட் படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…