‘மங்காத்தாவை விட கோட் படம் தான் பெஸ்ட்’…பிரேம்ஜி ஓபன் டாக்!
சென்னை : மங்காத்தா படத்தை விட கோட் படம் தான் நன்றாக இருக்கும் என படத்தில் நடித்துள்ள பிரேம் ஜி கூறியுள்ளார்.
கோட் படம் எந்த மாதிரி ஒரு கதைகளைத்தை கொண்ட படமாக இருக்கப்போகிறது? படத்தில் எத்தனை விஜய் கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறது ? என பல்வேறு எதிர்பார்ப்புடைய கேள்விகளுக்கு வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தான் பதில் கிடைக்கும். ஏனென்றால், படம் அன்று தான் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த அளவுக்குப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக முக்கிய காரணமே படத்தின் ட்ரைலரில் கூட படத்தின் கதையை முழுவதுமாக சொல்லாமல் ஒரு மேல் மட்டமாக வெங்கட் பிரபு காட்டியிருந்தார்.
எனவே, படத்தில் என்னதான் இருக்கிறது? என்னென்ன சர்ப்ரைஸ் தான் வெங்கட் பிரபு வைத்து இருக்கிறார் என ரசிகர்கள் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த சூழலில், இன்னுமே அவர்களுடைய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில், பிரேம்ஜி விஷயம் ஒன்றைக் கூறியுள்ளார். பிரேம் ஜி ஒரு அஜித் ரசிகர் என்பதைப் பல பேட்டிகளில் பேசியிருக்கிறார்.
அப்படிப் பட்ட அஜித்தின் தீவிர ரசிகரான பிரேம் ஜியே கோட் படம் தான் மங்காத்தா படத்தை விடச் சிறந்த படம் என்று கூறியுள்ளார். கோட் படம் இன்னும் வெளியாகவில்லை, அதற்கு முன்பு வரை வெங்கட் பிரபுவுடைய சிறந்த படம் என்றால் மங்காத்தா படத்தை தான் சொல்வார்கள். அப்படி மங்காத்தா படத்தை விடக் கோட் படம் அருமையாக இருப்பதாக பிரேம்ஜி கூறியுள்ளது, விஜய் ரசிகர்களுக்கு இன்னுமே படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
படத்தின் ப்ரோமோஷனுக்காக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரேம்ஜி கலந்துகொண்டபோது இந்த விஷயத்தை அவர் தெரிவித்தார். கதாபாத்திரமாகப் பார்த்தால் தன்னுடைய கதாபாத்திரம் மங்காத்தா படத்தில் அதிகம் என்பதால் மங்காத்தாவை கூறுவேன். அதுவே ஒரு படமாகச் சொல்லவேண்டும் என்றால் மங்காத்தாவை விடக் கோட் படம் தான் பெஸ்ட் என தன்னுடைய பாணியில் பிரேம் ஜி கூறியுள்ளார்.