GOAT திருவிழா! விஜய் ரசிகர்களுடன் ‘வைப்’ செய்த மூதாட்டி!
பாலக்காட்டில் திரையரங்கின் முன்பு விஜய் ரசிகர்களுடன் ஒரு மூதாட்டி நடனம் ஆடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பாலக்காடு : பொதுவாகவே விஜயின் படம் வெளியாகிறது என்றால் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளாவிலும் திரையரங்க வாசல்களில் திருவிழா கோலமாகத்தான் காட்சியளிக்கும்.
அந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள் என்றே கூறலாம். அதிலும், இன்று GOAT திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது.
இதனால், அதிகாலை 4 மணி முதலே கேரளாவில் விஜய் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில், இந்த கொண்டாட்டத்தின் போது பாலக்காட்டில் உள்ள திரையரங்கின் வாசலில் மூதாட்டி ஒருவர் விஜய் ரசிகர்களுடன் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#Watch | கேரளா: The GOAT பட வெளியீடு – திரையரங்கின் முன் குத்தாட்டம் போட்ட பாட்டி!#SunNews | #TheGOAT | #Vijay | #Kerala pic.twitter.com/lz4GFVIH53
— Sun News (@sunnewstamil) September 5, 2024
அந்த வீடியோவில், அந்த மூதாட்டி பின்னில் ஒலிக்கும் மேளத்திற்கு ஏற்றவாறு அந்த விஜய் ரசிகர்களுடன் நடனம் ஆடுவதை காணலாம். தன்னுடைய வயதை எல்லாம் மறந்து குழந்தை போல இப்படி நடனமாடுவது நம்மை வியப்படையவே செய்கிறது.
அங்கு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும், 6 வயது முதல் 60 வரை விஜய்க்கு ரசிகர்களாக இருப்பவர்கள் ஒன்றாய் சேர்ந்து எல்லாம் மறந்து இந்த நாளை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.