அடி தூள்! 300 கோடி வசூலை தாண்டிய ‘GOAT’..விஜய் படைத்த பிரம்மாண்ட சாதனை!
தமிழ் சினிமாவில் அதிகமுறை 300 கோடி வசூல் செய்த படங்களை கொடுத்த தமிழ் நடிகர் என்ற சாதனையை விஜய் படைத்துள்ளார்.
சென்னை : விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘GOAT ‘ படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டு வருகிறது. படம் எவ்வளவு கோடி வசூல் செய்துகொண்டிருக்கிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான, ஏஜிஎஸ் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து வருகிறது. குறிப்பாக, வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் படம் 288 கோடி வரை வசூல் செய்துள்ளதாக அறிவித்திருந்தது.
அதனைத்தொடர்ந்து, படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் 300 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. ‘GOAT’ படம் 300 கோடி வசூலை கடந்து பெரிய ஹிட் படமாக மாறியுள்ள நிலையில் விஜய்க்கு சாதனையையும் படம் கொடுத்துள்ளது. ஆம்…இந்த படத்தினை வைத்து விஜய் தமிழ் சினிமாவில், பெரிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
அது என்ன சாதனை என்றால், இதுவரை தமிழ் சினிமாவில் அதிகமாக 300 கோடி வசூல் செய்த திரைப்படங்கள் விஜய் திரைப்படங்கள் என்ற சாதனை தான். இதற்கு முன்னதாக பிகில் படம் மொத்தமாக 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. அந்த சாதனையை அதற்கு அடுத்ததாக வெளியான வாரிசு திரைப்படம் அந்த சாதனையை முறியடித்து 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
அதைப்போல, அதற்கு அடுத்ததாக வெளியான லியோ படம் பிகில், வாரிசு இரண்டு படங்களின் வசூலை மொத்தமாக முறியடித்து உலகம் முழுவதும் 500 கோடி வரை வசூல் செய்திருந்தது. இந்த சூழலில், GOAT படம் வெளியான 5 நாட்களில் 300 கோடி வசூலை தாண்டி விஜய்க்கு 4-வது 300 கோடி கொடுத்த படமாக மாறியுள்ளது.
இதுவரை, எந்த தமிழ் நடிகரின் படங்களும்,தொடர்ச்சியாகவும் அதிக முறையும் 300 கோடி வசூல் செய்தது இல்லை. ரஜினி படங்கள் 2.0, மற்றும் ஜெயிலர் மட்டும் தான் அவருக்கு 300 கோடிக்கு மேல் வசூல் கொடுத்த திரைப்படமாக இருக்கிறது. ஆனால், விஜய் படங்கள் 4 முறை 300 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.