GOAT படப்பிடிப்பில் நடிகர் விஜய்..ஆரவாரம் செய்த ரசிகர்கள்.!!

GOAT Shooting Spot

GOAT படப்பிடிப்பில் நடிகர் விஜய் பார்த்து அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் (The Greatest of All Time) ‘GOAT’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார், மேலும் இப்படம் டைம் ட்ராவல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக் கட்டத்தை கடந்துவிட்டது. சமீபத்தில், படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை பார்க்க ரசிகர்கள் பலரும் கூட்டமாக சென்று இருந்தார்கள் அது தொடர்பான வீடியோக்கள் வரிசையாக வெளியான வண்ணம் இருந்தது. அந்த வகையில், தற்பொழுது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

மோகனுடன் ஸ்னேகா! வைரலாகும் ‘GOAT ‘ படப்பிடிப்பு புகைப்படம்!

அந்த வீடியோவில் விஜய் ஒரு வீட்டின் மேலே நின்று கொண்டு தனது ரசிகர்களுக்கு கை அசைத்தார். அண்மையில், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில், விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்