Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீஸ் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த 2004 ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் நடித்து வெளியான திரைப்படம் தான் கில்லி. இத்திரைப்படம் வெளியான போது ரசிகர்களிடேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்று தமிழ் திரையுலகின் முதல் 50 கோடி வசூல் சாதனையை படைத்து, 200 நாட்கள் கடந்தும் ஓடியது.
இந்த படம் நடிகர் விஜய்க்கு அவரது சினிமா கேரியரில் ஒரு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது மட்டும் அல்லாமல் இந்த படத்தில் மூலம் தான் தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ஒரு ஆக்ஷ்ன் ஹீரோவாக பார்க்கவும் தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டோலிவுட்டில் பழைய படங்கள் திரும்ப ரீ-ரிலிஸ் செய்யப்பட்டு வருவது ஒரு ட்ரெண்ட்டாக இருக்கிறது. அப்படி இருக்கையில் விஜய் நடித்துள்ள இந்த கில்லி திரைப்படமும் நேற்றைய (ஏப்ரல்-20) நாளில் தமிழ்நாடு முழுவதும் 325 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆனது. தமிழ்நாடு மட்டுமின்றி பிரான்ஸ், இலங்கை, சிங்கப்பூர் போன்ற உலக நாடுகளிலும் கில்லி படம் ரீ-ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பி வருகிறது.
ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களிலேயே இந்த கில்லி படம் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் வெளியானது. இந்த திரைப்படம் இந்த ரீ-ரிலீஸ்ஸில் முதல் நாள் வசூலில் சில கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அதே போல் தமிழ் நாட்டில் முதல் நாள் வசூலாக கில்லி திரைப்படம் ரூ.4.25 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மும்பை நோக்கி…
கொல்கத்தா : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…