நடிகை லெட்சுமி மேனனுக்கு திருமணமா?
நடிகை லட்சுமிமேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சுந்தரபாண்டியன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழில் சுந்தரபாண்டியன் மற்றும் கும்கி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் றெக்க படத்தில் நடித்ததார்க்கு பின் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதன் பின் இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இவரது உடல் எடையும் அதிகரித்து விட்டது. இந்நிலையில், 22 வயதை எட்டியுள்ள லெட்சுமி மேனன், திருமணம் முடித்துக்கொண்டு தனது கணவருடன் செட்டில் ஆக முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.