உடனடியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள்! சேரனுக்கு வேண்டுகோள் விடுத்த பிரபல இயக்குனர்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 12 பிரபலங்கள் உள்ளனர். இந்த வீட்டிற்குள் தினந்தோறும் அனைவரும் ஒவ்வொரு வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வீட்டிற்குள் சண்டைகளும், மோதல்களுக்கு, சந்தோசமான தருணங்களும் இடம் பெறுகிறது.
இதனையடுத்து, இயக்குனர் சேரனுக்கும், சரவணனுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சரவணன் சேரனை, மரியாதை குறைவாக பேசியுள்ளார். சரவணனின் இந்த செயல் வெளியில் உள்ள திரையுலக பிரபலங்களை கொதித்தெழ செய்துள்ளது.
இதனையடுத்து இயக்குனர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில், ‘சேரன் அவர்களே உங்களதுஉயரம் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாது. உடனடியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்று ஒரு சொல்லி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025