வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!

நடிகர் அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

Good Bad Ugly box office

சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான ஐந்து நாட்களுக்குள், இந்த ஆக்‌ஷன் பொழுதுபோக்கு திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

அஜித்தின் ஃபேன் பாயான ஆதிக், தரமான சம்பவத்தை செய்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் படம் வெளியான ஐந்தே நாட்களில்.ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக ரோமியோ பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அஜீத் குமாருடன் குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, பிரியா பிரகாஷ் வாரியர், ஷைன் டாம் சாக்கோ, பிஎஸ் அவினாஷ், பிரபு, பிரசன்னா, ராகுல் தேவ், யோகி பாபு, சுனில் மற்றும் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதனிடையே, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கருக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி, இளமை இதோ ஆகிய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதால் 7 நாள்களுக்குள் படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்