Cooku with Comali Season 5 [file image]
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார்.
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பானது. இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகிய நிலையில், நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, மோனிஷா, பரத் உள்ளிட்ட கோமாளிகளும் விலகினார்கள். இவர்கள் எல்லாம் விலகியதால் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி எப்படி இருக்க போகிறது என்ற சோகமும் ரசிகர்களுக்கு மத்தியில் இருந்தது.
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிக்கு இணையாக சன் தொலைக்காட்சியில் மற்றோரு நிகழ்ச்சியும் அதைப்போலவே தொடங்கப்பட்டும் இருக்கிறது. டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற பெயரில் தொடங்கப்பட்டு இருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடுவராக வெங்கடேஷ் பட் தான் கலந்து கொண்டு இருக்கிறார். அதைபோலவே, இந்த நிகழ்ச்சியை அவர் தான் தயாரிக்கவும் செய்கிறார்.
இந்த டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் ஜிபி முத்து, மோனிஷா, பரத் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்துகொண்டும் இருக்கிறார்கள். விரைவில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளது. இதனையடுத்து விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் காரணத்தை ஜிபி முத்து கூறியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள ஜிபி முத்து ” இதற்கு முன்னதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நன்றாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் இருந்து இப்போது, என்னை சன் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்தார்கள். அங்கு சென்று நடிக்கிறேன். திரும்ப குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கூப்பிட்டால் அங்கேயும் போவேன்.
இந்த நிகழ்ச்சியை தயாரிக்கும் மீடியா மிஷன் நிறுவனம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்தது. அந்த நிறுவனம் இப்போது இந்த டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியை தயாரிக்கிறது. எனவே, இரண்டையும் பிரித்து பேசவேண்டாம். இரண்டுமே எனக்கு ஒன்று தான்” எனவும் ஜிபி முத்து கூறியுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…