நடிகர் கவின் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் அவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாது, தொலைக்காட்சி நடிகரும், தொகுப்பாளரும் ஆவார். இவர் தமிழில் பீட்சா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர், கனா காணும் காலங்கள், தாயுமானவன், சரவணன் மீனாட்சி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
நடிகர் கவின், உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த பெண்ணான லொஸ்லியாவின் மீது காதல் ஏற்பட்டது. அதன் பின் சில பிரச்சனைகளை சந்தித்த இவர், தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனிடையில் இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, இவரது தாயார் ராஜலக்ஷ்மி மற்றும் பாட்டி தமயந்தி இருவரும் சீட்டு கம்பெனி நடத்தி மோசடி செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, வெளியே வந்த கவின் இவரது தாயார் மற்றும் பாட்டி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்து, கவின் இருவரையும் ஜாமீனில் வெளியே எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…
வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…