பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின்! சிறையில் இருந்த தனது தாயை மீட்டெடுத்தார்!

Default Image

நடிகர் கவின் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் அவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாது, தொலைக்காட்சி நடிகரும், தொகுப்பாளரும் ஆவார். இவர் தமிழில் பீட்சா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர், கனா காணும் காலங்கள், தாயுமானவன், சரவணன் மீனாட்சி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

நடிகர் கவின், உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த பெண்ணான லொஸ்லியாவின் மீது காதல் ஏற்பட்டது. அதன் பின் சில பிரச்சனைகளை சந்தித்த இவர், தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனிடையில் இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, இவரது தாயார் ராஜலக்ஷ்மி மற்றும் பாட்டி தமயந்தி இருவரும் சீட்டு கம்பெனி நடத்தி மோசடி செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, வெளியே வந்த கவின் இவரது தாயார் மற்றும் பாட்டி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்து, கவின் இருவரையும் ஜாமீனில் வெளியே எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
smriti mandhana SCORE
TN RAIN
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu