இளன் இயக்கத்தில் யுவன் இசையில் களமிறங்கும் கவின்! வெளியானது “ஸ்டார்” பட போஸ்டர்!
டாடா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் அடுத்ததாக பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் இயக்குனரான இளன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டது .
இவர்கள் மூன்று பேரும் இணையும் அந்த படத்திற்கான தலைப்பு என்ன என்பதையும் நாளை அறிவிக்க போவதாகவும் நேற்று புகைப்படம் ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தனர். இந்த நிலையில் அதனை தொடர்ந்து தற்போது படத்திற்கான போஸ்டரும் டைட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது .
Anyone with a dream is a #STAR ???? #STAR special promo on August 31st ????@elann_t @Kavin_m_0431 @riseeastcre @SVCCofficial @Pentelasagar @BvsnP @Ezhil_DOP @PradeepERagav @Meevinn @sujith_karan @vinoth_offl @proyuvraaj @vamsikaka @dancersatz @muthukumaranvfx @venkystudios pic.twitter.com/rC5TsGbl9L
— Raja yuvan (@thisisysr) August 28, 2023
போஸ்டரில் இதுவரை இல்லாத அளவிற்கு கவின் வித்தியாசமான லுக்கில் இருக்கிறார். அதேபோல படத்திற்கு தலைப்பு ‘ஸ்டார்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து படத்திற்கான ப்ரோமோ வீடியோ ஒன்று வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் ஏற்கனவே இந்த ஸ்டார் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருந்தார். படத்திற்கான போஸ்டர்கள் கூட கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது . பிறகு சில காரணங்களால் படத்தில் இருந்து ஹரிஷ் கல்யாண் விலக அந்த படத்தில் தற்போது கவின் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.