இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தில் ரிது வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன், பார்த்திபன் மற்றும் திவ்யா தர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
2017 ஆண்டுக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. பிறகு இறுதியாக படம் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. ரிலீஸாகும் என சியான் விக்ரம் ரசிகர்கள் மிகவம் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக மிண்டும் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது.
மேலும், படம் ரிலீஸ் ஆவதற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.. இப்படி, ரிலீஸ் தேதி அறிவித்தும் படம் வெளியாகவில்லை என்பதால் ஏன் என்ற கேள்வி பலரது மனதில் உள்ளது. ஆதாவது, ஏன் என்று பார்க்கையில் “நீதிமன்ற வழக்கில் கொடுக்க வேண்டிய ரூ.3 கோடி உட்பட மொத்தம் ரூ.60 கோடி இருந்தால்தான் படம் வெளியாகும்” என்று கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, இந்தப்படத்தின் வியாபாரம் சரியாக நடந்திருந்தால் இந்தச் சிக்கல் என்பது இருந்திருக்காது என்றும், டிவி உரிமை, ஓடிடி உரிமை மற்றும் தியேட்டர் வெளியீட்டு உரிமை வியாபாரம் ஆகியிருந்தால் ரூ.50 கோடிக்கு மேல் கிடைத்திருக்கும் எனவும் கூறப்படுகிறது. இவ்வாறு செய்திருந்தால், படமும் சிக்கலின்றி வெளியாகி இருக்கும் என்று சில நம்பதக்க சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
நாளை வெளியாகுமா துருவ நட்சத்திரம்? கடைசி நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
சரி நடந்தது நடித்து போச்சு என்று விரைவில் எல்லாவற்றையும் சரிசெய்து படத்தை வெளியிட்டுவிட தேவையான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார் கெளதம் மேனன். அநேகமாக நடிகர் விக்ரமிடம் இது குறித்து எடுத்து கூறி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பார் என்றும், எல்லாம் சரியாக நடந்தால் இன்னும் ஓரிரு நாட்களில் புதிய வெளியிட்டு தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…