இந்த திரைப்படம் தோல்வியடைந்ததற்கு பல காரணங்கள் இருக்கிறது என்று கூட சொல்லலாம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆக்சன் ஹீரோவாக இருந்த சரத்குமாருக்கு இந்த படத்தில் பெரிய அளவில் சண்டை காட்சிகளே இருந்திருக்காது. அதேபோல கமர்சியல் கதைகளை தேர்ந்தெடுத்து மக்களுக்கு பிடித்த நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த ஜோதிகா வில்லி கதாபாத்திரத்தில் நடித்தது படத்திற்கு சரியாக செட் ஆகவில்லை இப்படியான பல காரணங்களே இந்த திரைப்படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூட கூறலாம்.
இதற்கிடையில், இந்த திரைப்படத்தின் தோல்வி குறித்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்று பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொருத்தவரை இந்த திரைப்படத்தில் தோல்விக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக கூறுவேன். ஒன்று என்னவென்றால் படத்தில் நடிகை ஜோதிகா வில்லி பாத்திரத்தில் நடித்தது தான்.
ஏனென்றால் ரசிகர்கள் அவரை அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்த காரணத்தால் அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சரியாக இல்லை ஒரு பத்து நிமிடம் முடிவதற்கு முன்னாடியே படத்தை முடித்திருக்க வேண்டும். ஆனால் சரத்குமார் சார் அவருக்காக ஒரு சண்டைக்காட்சியை வைத்தேன். அது தப்பாக போயிட்டு இதுதான் படத்தின் தோல்விக்கான காரணம்” எனவும் இயக்குனர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…