ஜோதிகா நடித்ததால் தான் அந்த படம் தோல்வி! கெளதம் மேனன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Jyothika
Jyothika இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் ஜோதிகா, சரத்குமார், ஆண்ட்ரியா ஜெர்மியா, மிலிந்த் சோமன், விடிவி கணேஷ், கூல் சுரேஷ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’. இந்த திரைப்படத்தில் ஜோதிகா வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரிய தோல்வியை சந்தித்தது.

இந்த திரைப்படம் தோல்வியடைந்ததற்கு பல காரணங்கள் இருக்கிறது என்று கூட சொல்லலாம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆக்சன் ஹீரோவாக இருந்த சரத்குமாருக்கு இந்த படத்தில் பெரிய அளவில் சண்டை காட்சிகளே இருந்திருக்காது. அதேபோல கமர்சியல் கதைகளை தேர்ந்தெடுத்து மக்களுக்கு பிடித்த நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த ஜோதிகா வில்லி கதாபாத்திரத்தில் நடித்தது படத்திற்கு சரியாக செட் ஆகவில்லை இப்படியான பல காரணங்களே இந்த திரைப்படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூட கூறலாம்.

read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்!

இதற்கிடையில், இந்த திரைப்படத்தின் தோல்வி குறித்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்  சமீபத்திய பேட்டி ஒன்று பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொருத்தவரை இந்த திரைப்படத்தில் தோல்விக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக கூறுவேன். ஒன்று என்னவென்றால் படத்தில் நடிகை ஜோதிகா வில்லி பாத்திரத்தில் நடித்தது தான்.

READ MORE- அந்த நடிகருடன் காதலில் விழுந்தாரா நடிகை ரிது வர்மா?

ஏனென்றால் ரசிகர்கள் அவரை அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்த காரணத்தால் அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல படத்தின் கிளைமாக்ஸ் காட்சி  சரியாக இல்லை ஒரு பத்து நிமிடம் முடிவதற்கு முன்னாடியே படத்தை முடித்திருக்க வேண்டும். ஆனால் சரத்குமார் சார் அவருக்காக ஒரு சண்டைக்காட்சியை வைத்தேன். அது தப்பாக போயிட்டு இதுதான் படத்தின் தோல்விக்கான காரணம்” எனவும் இயக்குனர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்