மீண்டும் தள்ளிப்போன ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் – கௌதம் மேனன் வருத்தம்!

dhruva natchathiram

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தில் ரிது வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன், பார்த்திபன் மற்றும் திவ்யா தர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. பிறகு இறுதியாக படம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இருந்தாலும், படத்தை நாளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சியான் விக்ரம் ரசிகர்கள் மிகவம் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் இன்று வெளியிடுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தினால் மிண்டும் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது. இது குறித்து கௌதம் மேனன் தனது X பக்கத்தில், “மன்னித்துவிடுங்கள், துருவ நட்சத்திரம் இன்று வெளியாகவில்லை. படம் வெளியாக இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. கூடிய விரைவில் அனைத்து திரையரங்குகளிலும் படத்தை வெளியிட முடியும் என நம்புகிறேன்.

80ஸ் பில்டப் முதல் துருவ நட்சத்திரம் வரை..! நாளை வெளியாகவுள்ள அட்டகாசமான திரைப்படங்கள் இதோ.!

மேலும், படத்திற்கான ஆதரவு மனதைக் கவரும் வகையில் உள்ளது, மேலும் எங்களைத் தொடர வைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் நாங்கள் வருவோம். உங்களது ஆதரவு தான் எங்களை கொண்டு செல்கிறது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சிம்பு நடிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை இயக்க ஒப்பந்தம் போட்டு ரூ.2.40 கோடியை பெற்ற கெளதம் மேனன், படத்தை முடிக்காமல் பணத்தையும் திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது.

இதனால், துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடைக்கோரி பணம் கொடுத்த ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், வாங்கிய பணத்தை நாளை காலை 10.30 மணிக்குள் கௌதம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இல்லையென்றால், துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்