சியான் விக்ரமை வைத்து இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் நிதி நெருக்கடி காரணமாக சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வந்த நிலையில், ஒருவழியாக வருகின்ற 24ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
தற்போது, படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நாளில், படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அந்த வகையில், சமீபத்தில் கலாட்டா மீடியா ஊடகத்திற்கு பேட்டி அளித்த கௌதம் மேனன், ஜெயிலரில் வில்லனாக வரும் மலையாள நடிகர் விநாயகன் உண்மையிலேயே ஒரு சூப்பரான நடிகர் என பாராட்டியுள்ளார்.
இந்நிலையில், வில்லன் கதாபாத்திரத்தில் விநாயகன் நடிப்பு குறித்து பேசிய, கௌதம் மேனன், “ஜெயிலரில் அவர் உண்மையிலேயே கலக்கிட்டாரு, அவருடைய நடிப்பால் மக்களை அப்படியே கவர்ந்துவிட்டார். ஜெயிலர் படத்தில் வரும் ஒரு காட்சியில் பிச்சை எடுப்பார். ஆனால், நான் அவரை அப்படி பார்க்கவில்லை, நான் அவரை என்னை போல தான் பார்த்தேன். ஒரு ஸ்டைலிஷான வில்லனாக தான் பார்த்தேன், ஆனால் பேசும்பொழுது லோக்கலாக பேசுவார்” என தெரிவித்துள்ளார்.
துருவ நட்சத்திரம் படத்தில் அவர் தான் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெய்லரில் சீலை கடத்தல் காரராக நடித்திருக்கும் விநாயகன், வில்லனாக துருவ நட்சத்திரம் படத்தில் கோர்ட் ஷூட் அணிந்து, இங்கிலீஸில் பூந்து விளையாடும் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயிலர் படத்தில் எப்படி பாராட்டை பெற்றாரோ அதேபோல், துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் தனது நடிப்பால் கலக்கி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க மறுத்த ரோலக்ஸ்! காரணத்தை கேட்டு ஷாக்கான விக்ரம்!
இந்த திரைப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…