வர்மனை பிச்சை காரனாக பார்க்கல…என்ன மாதிரி தான் பார்த்தேன் – கௌதம் மேனன் புகழாரம்.!

Dhruva Natchathiram - Vinayakan

சியான் விக்ரமை வைத்து இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் நிதி நெருக்கடி காரணமாக சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வந்த நிலையில், ஒருவழியாக வருகின்ற 24ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

தற்போது, படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நாளில், படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அந்த வகையில், சமீபத்தில் கலாட்டா மீடியா ஊடகத்திற்கு பேட்டி அளித்த கௌதம் மேனன், ஜெயிலரில் வில்லனாக வரும் மலையாள நடிகர் விநாயகன் உண்மையிலேயே ஒரு சூப்பரான நடிகர் என பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், வில்லன் கதாபாத்திரத்தில் விநாயகன் நடிப்பு குறித்து பேசிய, கௌதம் மேனன், “ஜெயிலரில் அவர் உண்மையிலேயே கலக்கிட்டாரு, அவருடைய நடிப்பால் மக்களை அப்படியே கவர்ந்துவிட்டார். ஜெயிலர் படத்தில் வரும் ஒரு காட்சியில் பிச்சை எடுப்பார். ஆனால், நான் அவரை அப்படி பார்க்கவில்லை, நான் அவரை என்னை போல தான் பார்த்தேன். ஒரு ஸ்டைலிஷான வில்லனாக தான் பார்த்தேன், ஆனால் பேசும்பொழுது லோக்கலாக பேசுவார்” என தெரிவித்துள்ளார்.

துருவ நட்சத்திரம் படத்தில் அவர் தான் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெய்லரில் சீலை கடத்தல் காரராக நடித்திருக்கும் விநாயகன், வில்லனாக துருவ நட்சத்திரம் படத்தில் கோர்ட் ஷூட் அணிந்து, இங்கிலீஸில் பூந்து விளையாடும் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயிலர் படத்தில் எப்படி பாராட்டை பெற்றாரோ அதேபோல், துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் தனது நடிப்பால் கலக்கி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க மறுத்த ரோலக்ஸ்! காரணத்தை கேட்டு ஷாக்கான விக்ரம்!

துருவ நட்சத்திரம்

இந்த திரைப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்