Garudan Trailer [FIle Image]
சென்னை : சூரி நடிப்பில் உருவாகியுள்ள கருடன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் துரைசெந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துள்ள திரைப்படம் கருடன். இந்த திரைப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் ரேவதி சர்மா, ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், மொட்டை ராஜேந்திரன், பிரகிதா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் கூட ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருந்தது.
இதனையடுத்து, படத்திற்கான டிரைலர் இன்று வெளியிடபட்டுள்ளது. ட்ரைலரில் வரும் காட்சிகள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கிறது. அதைப்போல சூரியின் நடிப்பு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அருமையாக இருப்பதால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.
இந்த டிரைலரை பார்த்துவிட்டு பலரும் கண்டிப்பாக சூரிக்கு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமையும், படத்தின் கதை வேற லெவலில் இருக்கும் போல எனவும் கூறி வருகிறார்கள். இந்த திரைப்படம் வரும் மே 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் ட்ரைலர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…