கருடன் : இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மே 31-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கருடன்’. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.
கருடன் எனும் படத்தின் பெயருக்கு ஏற்றது போல படம் அருமையாக எடுக்கப்பட்டு இருப்பதால் படத்தினை பார்த்துவிட்டு மக்கள் பாராட்டி வருகிறார்கள். படத்தை பார்த்துவிட்டு மக்கள் பலரும் நடிகர் சூரியன் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். படம் பாசிட்டிவான விமர்சனங்கள் பெற்றுவருவதால் டிக்கெட் பதிவும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.
படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருவதால், வசூல் ரீதியாகவும், படத்திற்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்து இருக்கிறது. அதன்படி, கருடன் படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் மொத்தமாக 3 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இதற்கு முன்னதாக, சூரி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 3.85 கோடி வசூல் செய்து இருந்தது. அதனை தொடர்ந்து சூரி நடிப்பில் வெளியான கருடன் படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் வசூல் 3 கோடி செய்துள்ளது. இருப்பினும், விடுதலை படத்திற்கு கிடைத்ததை போல, கருடன் படத்திற்கும் பாசிட்டிவான விமர்சனங்கள் வருவதால் வரும் நாட்களில் இன்னுமே வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…