இளையராஜாவை சீண்டிய வைரமுத்து! ‘கொஞ்சமாவது நன்றி இருக்கனும்’ எச்சரித்த கங்கை அமரன்!
![Vairamuthu Ilaiyaraaja gangai amaran](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/04/Vairamuthu-Ilaiyaraaja-gangai-amaran.webp)
Ilaiyaraaja : இளையராஜாவை மறைமுகமாக விமர்சித்த வைரமுத்துவை கங்கை அமரன் கண்டித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு இடையே மன கசப்பு இருக்கிறது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் ஒன்றாக பழகி வந்த நிலையில், மனக்கசப்பு ஏற்பட்டதன் காரணமாக பேசிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இதனையடுத்து, விழாவின் மேடை ஒன்றில் இளையராஜாவரை பற்றி மறைமுகமாக வைரமுத்தி பேசியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், கங்கை அமரன் வைரமுத்துவை எச்சரித்து பேசியுள்ளார்.
படிக்காத பக்கங்கள் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட வைரமுத்து ” இப்போது இசை பெரியதா? அல்லது பாடல் வரிகள் பெரியதா? என்கிற பிரச்சனை புதிதாக கிளம்பி இருக்கிறது. ஒரு பாடலை உருவாக்கும்போது அந்த படளுடைய இசை மற்றும் பாடலுடைய வரிகள் இணையும் போது நல்ல பாடல்கள் கிடைக்கிறது.
சில சமயங்களில் இசையை விட மொழி சிறந்ததாகத் திகழும் சந்தர்ப்பங்கள் உண்டு, இதைப் புரிந்துகொண்டவன் ஞானி,புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி” என்று வெளிப்படையாகவே வைரமுத்து பேசி இருந்தார். இதனை பார்த்த பலரும் இளையராஜாவை மறைமுகமாக வைத்து தான் வைரமுத்து இப்படி பேசி இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.
ஏனென்றால், இளையராஜாவின் பாடல்களின் காப்புரிமை தொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது நான் எல்லாரை விடவும் மேலானவன் பாடல்களில் தனது உரிமைதான் மேலானது என கூறி இருந்தார். அதனை வைத்து தான் மறைமுகமாக வைரமுத்து இப்படி பேசி இருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதனையடுத்து, வைரமுத்துவை கண்டித்து கங்கை அமரன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பொதுவாகவே மனிதனாக இருந்தால் கொஞ்சம் நன்றி வேண்டும். எங்களால் மேலே வந்த ஒருவர் இப்படி பேசுவது தவறு. வைரமுத்து பாடலுக்கு அதிகமான புகழ் கிடைத்துவிட்ட காரணத்தால் கர்வம் தலைக்கேரிவிட்டது. அவரை அடக்கி வைக்க ஆள் இல்லாத காரணத்தால் அவர் ரொம்பவே துள்ளிக்கொண்டு இருக்கிறார்.
வைரமுத்துவை வாழவைத்தது இளையராஜா தான். எனவே, இளையராஜாவின் போட்டோ வைத்து தினம் அவர் வணங்க வேண்டும். நான் வெளிப்படையாகவே அவருக்குச் ஒரு சவால் விடுகிறேன், இளையராஜா இசையில் நீங்கள் இதுவரை எழுதிய பாடல்கள் அனைத்தையும் வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள் அந்த பாடல்கள் இப்படி வந்து இருக்க முடியுமா? இசையில்லாமல் பாடல்கள் என்பது இல்லவே இல்லை. இனிமேல், இளையராஜாவை பற்றி குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளைச் கண்டிப்பாக சந்திக்க வேண்டி இருக்கும்” என்று மிகவும் கோபத்துடன் பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024![Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MP-Rahul-Gandhi-BJP-MP-Pratap-Chandra-Sarangi.webp)
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024![suriya and bala](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/suriya-and-bala.webp)
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024![Congress MPs - BJP MPs Protest in Parliament](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MPs-BJP-MPs-Protest-in-Parliament.webp)
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024![Protest against Amit shah speech](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Protest-against-Amit-shah-speech.webp)
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024![GOLD PRICE](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/GOLD-PRICE-7.webp)