ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை புகழ்ந்து தள்ளிய கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை.!
ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “ஆர்.ஆர்.ஆர்”. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்திருந்தார்.
விமர்சன ரீதியாக பெரிய வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், பல சாதனைகளை படைத்தது. உலகம் முழுவதும் 1,800 கோடி வசூல் செய்து இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்ததுள்ளது. வசூலையும் தாண்டி படம் பல விருதுகளையும் குவித்து வருகிறது.
குறிப்பாக சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் 95-வது ஆஸ்கர் விருதுகள் இறுதி பட்டியலில் ஒரிஜனல் பாடல் (original song )என்ற பிரிவில் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், இந்த படத்தை பார்த்து விட்டு கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை நத்தலி இமானுவேல் ஆர்.ஆர்.ஆர் படத்தை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக ஆர்.ஆர்.ஆர் படத்தில் உள்ள சில முக்கியமான காட்சிகளை ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு படம் அருமையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். நாட்டு நாட்டு பாடல் காட்சி ஒன்றை பகிர்ந்து பாடலில் நடனம் ரொம்பவே அருமையாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.