Categories: சினிமா

நம்ப வச்சி ஏமாத்திய ராம் சரண்..! கேம் சேஞ்சர் படத்தின் சோக அப்டேட்.!

Published by
செந்தில்குமார்

தமிழ் திரை உலகிற்க்கு ஏராளமான வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் ஷங்கர். தற்போது தெலுங்கில் நடிகர் ராம்சரனுடன் இணைந்து ‘கேம்சேஞ்சர்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ராம்சரண் தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி பதிவிட்டிருந்தார்.

விஜய் கிட்ட கதை சொல்ல போறேன்! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உறுதி!

அந்த போஸ்டர்ட் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இந்த திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஜரகண்டி’ தீபாவளி திருநாளன்று வெளியாகும் என்று திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரீயேசன்ஸ் அறிவித்தது. அதிலிருந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்துக் காத்துள்ளனர்.

இந்நிலையில், முதல் பாடல் குறித்த முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், கேம்சேஞ்சரின் முதல் பாடலான ஜரகண்டி பாடலின் வெளியீடு, தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் இந்த பாடல் குறித்த அப்டேட் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாகலமாக நடந்து முடிந்த நிச்சியதார்த்தம்.! விரைவில் காதலியை கரம் பிடிக்கிறார் காளிதாஸ்.!

மேலும் சுமார் 15 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ள இந்த பாடல், நாளை தீபாவளி அன்று வெளியாகும் என காத்திருந்த நிலையில், இப்போது பாடல் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“அதை போட்டுட்டு நடிக்கவே மாட்டேன்” அந்த காரணத்துக்காக அர்ஜுன் ரெட்டி படத்தை உதறிய சாய் பல்லவி!

ஹைதராபாத் :  கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சந்தீப் ரெட்டி வங்கா…

49 minutes ago

‘இது மாதிரி சதத்தை பார்த்தது இல்லை’..கம்பீரை மிரள வைத்த அபிஷேக் சர்மா!

மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில்…

2 hours ago

வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க மத்திய அரசு திணறி வருகிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…

2 hours ago

டி20 கிரிக்கெட் தொடரில் வரலாறு படைத்த வருண் சக்கரவர்த்தி!

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.…

2 hours ago

STR50 : கைவிட்ட கமல்ஹாசன்…சிம்பு எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்…

3 hours ago

முதல் பந்திலேயே சிக்ஸ்… டி20யில் ரெக்கார்ட் வைத்த சஞ்சு சாம்சன்.!

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,…

4 hours ago