தமிழ்நாடு கலாசார உடையுடன் ருதுராஜ் – உத்கர்ஷா தம்பதினரின் கலக்கல் போட்டோ ஷூட்.!
தமிழ்நாடு கலாசாரபடி வேஷ்டி மட்டும் பட்டு சேலையுடன் தங்களது நிச்சயதார்த்தத்தை நடத்திய ருதுராஜ் – உத்கர்ஷா தம்பதினரின் கலக்கல் போட்டோ ஷூட் இணையத்தில் வைரல்.
CSK தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அவருடைய நீண்டநாள் காதலியான உத்ராக்ஷாவினை ஜூன் 3ம் தேதி மாலை திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து, அவரது திருமண நிகழ்வின் கியூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது.
View this post on Instagram
தற்போது, தமிழ்நாட்டின் கலாசார உடையுடன் தனது நிச்சயதார்த்தத் நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு, உத்கர்ஷா எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பது மற்றும் எனது பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே எனது வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைப் பற்றி சரியாகத் தெரியும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
சென்னை மக்கள் மற்றும் சி.எஸ்.கே அணி எனக்கு அளித்த வாழ்க்கைக்காக, மகாராஷ்டிர முறைப்படி நடக்க வேண்டிய எங்கள் திருமண நிச்சயதார்த்தம், தென்னிந்திய பாரம்பரியப்படி நடக்க வேண்டும் என என் மனைவி உத்கர்ஷாதான் முடிவு செய்தார் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram