‘குட் பேட் அக்லி’ முதல் பாடல் எப்போது? சுடச் சுட…. சூசகமாக பதிவிட்ட ஜி. வி. பிரகாஷ்.!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும், 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் முதல் பாடல் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.

good bad ugly - gv prakash

சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு, கார் ரேஸ் என இரண்டிலும் பயணித்து வரும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் அடுத்த மாதம் வெளியாகும் நிலையில், சமீபத்தில் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை வானத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுக்கிறது என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு டீசரில் பழைய அஜித்தை பார்க்க முடிந்த்து, மாஸ் டயலாக், ஆக்ஷன், நடை , உடை என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில், படத்தின் அடுத்த அப்டேட் எப்போடா வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ட்ரைலர் இம்மாதம் இறுதியில் வெளிவரும் என தகவல் கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, அதற்கு முன், படத்தின் முதல் பாடல் வெளியாகாத? என்று ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளம் மூலம் சூசகமாக மாஸ் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், “முதல் பாடல் விரைவில் மாமே…. சுடச் சுட ரெடி பன்னிட்டு இருக்கோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் படத்தில் நடிகர் அஜித் குமார் ஏ.கே. ஆகவும், நடிகை த்ரிஷா ரம்யாவாகவும் நடிக்கின்றனர். மேலும் துணை நடிகர்களாக பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தை நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி ஷங்கர் தயாரித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்