G.V.Prakash: சமூக வலைத்தளம் மூலம் உதவி கேட்ட விவசாயி மகனுக்கு பணம் அனுப்பிய நடிகர் ஜி.வி.பிரகாஷை பலரும் பாராட்டி வருகின்றனர். பொதுவாக பெரிய நடிகர்கள் பலரும் தனது ரசிகர்களை வைத்து மக்களுக்கோ அல்லது தனது ரசிகர்களுக்கோ உதவி செய்வது வழக்கம். ஆனால், இதனை விட சற்று வித்தியசமாக சமூக வலைத்தளங்கள் மூலம், உதவி கேட்கும் ஏழைகளுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைதளமான X தள பக்கத்தில் மெர்சல் குமார் என்பவர், தனக்கும், தன் தந்தைக்கும் உடுத்த உடை வேண்டும் என ஜி.வி.பிரகாஷிடம் கேட்க, உடனே ஜி.வி.பிரகாஷ், அவரது கூகுள் பேஎண்ணுக்கு ரூ.6,000 அனுப்பி வைத்தார். இதற்கு நன்றி தெரிவித்த மெர்சல் குமார், ஜி.வி.பிரகாஷ் உடனான கலந்துரையாடலை X தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து மெர்சல் குமார் தனது X தள பக்கத்தில், ‘நான் ஒரு விவசாயி வீட்டு பையன் எனக்கு மற்றும் எனது தந்தைக்கு உடுத்த உடை வாங்க உதவி செய்த ஜி.வி.பிரகாஷ் அண்ணாவிற்கு மிக்க நன்றி. உடை வாங்க ரூ.6000 உதவி செய்யதார்க்கு நன்றி அண்ணா, உங்கள் உதவியை ஒரு போதும் மறக்க மாட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இவ்வாறு உதவி செய்வது இது முதல் முறையல்ல, இது போன்ற பலருக்கு உதவி கரம் நீட்டியுள்ளார். அண்மையில், சமூக பயனர் ஒருவர் சிறுவனின் மூளைக்கு அருகில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற நிதியுதவி கோரி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து உதவி கேட்டவருக்கு தன்னுடன் பங்காக ஜி.வி.பிரகாஷ், 75,000 ரூபாய் அனுப்பி உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…