ரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய பார்க்கிங்? முழு விமர்சனம் இதோ!

Parking Movie Review

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பார்க்கிங். இந்த திரைப்படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ். பாஸ்கர், ரமா, பிரார்த்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமையாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கான டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், படத்தை முன்னதாகவே பார்த்துவிட்டு கெளதம் கார்த்திக் போன்ற பிரபலங்கள் படத்தை பாராட்டி தங்களுடைய விமர்சனத்தை கூறினார்கள். இதனால் படத்தின் மீது இன்னும் எதிர்பார்ப்பு அதிகமானது. எதிர்பார்த்ததைப்போலவே மக்களுக்கு பிடித்ததுபோலவே படம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான இந்த திரைப்படத்தை பார்த்த அனைவரும் படம் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள். விமர்சன ரீதியாக பத்ம மக்களுக்கு மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘பார்க்கிங் ‘ படத்தினுடைய முழு திரை விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.

கதை

படத்தின் கதை படி, ஹீரோ ஹரிஷ் கல்யாண் ஐடி கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவருக்கு இந்துஜாவுடன் திருமணம் முடிந்த படியும், அவர் கர்ப்பமாக இருந்தபடியும் படத்தில் கட்டப்பட்டுள்ளது. பிறகு இருவரும் ஒரு புதிய வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார்கள். அதே காம்பவுண்ட் வீட்டில் தான் எம்.எஸ்.பாஸ்கர் தனது மகள் மனைவியுடன் வசித்து வருகிறார். வீட்டிற்கு வந்த ஆரம்ப காலத்தில் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண்  குடும்பத்திற்குள் நல்ல பழக்க வழக்கம் ஏற்படுகிறது.

பிறகு ஒரு கார் ஒன்றை வாங்கியதன் பிறகு தான் பிரச்சனையே தொடங்குகிறது. ஹாரிஸ் கல்யாண் புதிதாக கார் ஒன்றை வாங்கி அதனை வீட்டின் வாசலில் நிறுத்துகிறார்.  வாசலில் நிறுத்தியதால் இடமே கொஞ்சம் தான் இருக்கிறது இதில் கார் விட்டால் எப்படி நடந்து செல்ல முடியும்? வெளியே காரை விடுங்கள் என்று கூறுகிறார்.

சிவகார்த்திகேயன் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் லோகேஷ்.! தலைவர் 171 படத்தின் சூப்பர் அப்டேட்…

பிறகு வெளியே விட பயந்து காருக்கு எதாவது ஆகிவிடும் உள்ளே விடுவதால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க எம்.எஸ்.பாஸ்கருக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. வாக்கு வாதத்தில் இருந்த இந்த பார்க்கிங் பிரச்சனை ஒரு கட்டத்திற்கு மேல் கைகலப்பாக மாற மாறி மாறி அடிதடி சண்டையில் இருவரும் ஈடுபடுகிறார்கள்.

பின்,  ஹரிஸ்கல்யானை தீர்த்து கட்டவேண்டும் என்று திட்டம் போட்டு எம்.எஸ்.பாஸ்கர் பல விஷயங்களை செய்கிறார். ஆள் வைத்து சண்டையை இழுத்துவிடுவது என ஹரிஷ்கல்யாணுக்கு எதிராக செயல்படுகிறது. பின், ஹரிஷ் கல்யாணி போல எம்.எஸ்.பாஸ்கருக்கும் புதிய கார் ஒன்றை வாங்குகிறார்.  பிறகு இருவரில் யார் வீட்டின் முன்பு காரை நிறுத்துகிறார்கள்? இறுதியில் என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை.

விமர்சனம்

ஒரு பார்க்கிங் பிரச்சனையை எப்படி மக்களுக்கு படமாக கொடுக்கவேண்டும் என்பதனை இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கொடுத்து இருக்கிறார். அதைப்போல படத்திற்கு முக்கிய பலமாக அமைந்தது என்றால் எம்.எஸ்.பாஸ்கர் என்றே கூறலாம். அந்த அளவிற்கு வழக்கமாக தன்னுடைய நடிப்பால் படத்தில் மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறார். படத்தில் ஹரிஷ் கல்யாண், இந்து ஜா கெமிஸ்ட்ரியும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.

அதைப்போல, சாம் சிஎஸ் உடைய பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்துடன் பார்க்கும் போது இன்னும் நம்மளை படத்திற்குள் இழுத்து சென்று படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆசையை தூண்டுகிறது. படத்தினுடைய நெகட்டிவ் என்று பெரிதாக எதுவும் சொல்லவே முடியாது ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை எதார்த்தகமாக முடிக்காதது தான்.

மற்றபடி படத்தில் நெகட்டிவ் என்று சொல்லும் அளவிற்கு எதுவும் பெரிதாக இல்லை. படத்தை குடும்பமாக திரையரங்கிற்கு சென்று பார்க்கவேண்டும் என்றால் கண்டிப்பாக பார்க்கிங் படத்தை பார்க்கலாம்.  இந்த ஆண்டு வெளியான பீல் குட் படங்களில் கண்டிப்பாக பார்க்கிங் படமும் இடம் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்