வெங்கட் பிரபு முதல் சிவகார்த்திகேயன் வரை! ‘GOAT’ படம் பார்க்க வந்த பிரபலங்கள்!
'GOAT' படம் வெளியான நிலையில் சிவகார்த்திகேயன், திரிஷா, வெங்கட் பிரபு ஆகியோர் ரசிகர்களுடன் படத்தின் முதல் காட்சியை கண்டு களித்தனர்.

சென்னை : விஜயின் ‘GOAT’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் திரையரங்குகளில் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் 9 மணி சிறப்புக்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், காலை முதல் ரசிகர்கள் திரையரங்கில் காத்திருந்து கொண்டாடி வருகிறார்கள்.
கேரளா மற்றும் தெலுங்கானாவில் காலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதிகாலை முதல் இப்போது வரை கொண்டாடி படத்தை பற்றி பாசிட்டிவான, விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். விமர்சனங்களை வைத்து பார்க்கையில், கண்டிப்பாக படம் விஜய்க்கு பிளாக் பஸ்டர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில். படம் வெளியாவதையொட்டி பிரபலங்கள் பலரும் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். குறிப்பாக, இயக்குனர்கள் நெல்சன் திலீப் குமார், லோகேஷ் கனகராஜ், அட்லீ, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்ட இயக்குனர்கள் பட்டாளமே வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள். அதைப்போலவே, சினிமா பிரபலங்களும் திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்த்து வருகிறார்கள்.