அந்த படத்திலிருந்து நான் விஜய் ரசிகை.!- ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது தனது 66 -வது படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 5 படங்களும் மிகப்பெரிய வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
நடிப்பதை மட்டுமில்லாமல், நிஜ வாழ்க்கையிலும் மிகவும் எளிமையாக இருப்பதால் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். மக்களை தாண்டி சினிமா பிரபலங்கள் பலரும் விஜய் ரசிகர்கள். இதனால் விஜய் குறித்து பல நடிகர்கள், நடிகைகள் பெருமாக பேசுவது உண்டு.
அந்த வகையில், பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் பணிபுரிந்து குறித்தும், விஜய்க்குறித்தும் சில விஷயங்களை பேசியுள்ளார்.
விஜய் குறித்து பேசியது” தளபதி விஜய் சார் தமிழ் இண்டஸ்ட்ரியின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தும் மிகவும் எளிமையாக இருப்பார். படப்பிடிப்பிற்கு வந்து சூப்பர் ஸ்டார் மாதிரி இருக்கமாட்டார் சகஜமாக அனைவரிடமும் பழகுவார். மிகவும் நல்ல மனிதர். மாஸ்டர் படத்திலிருந்து நான் விஜய் ரசிகையாக மாறிவிட்டேன். மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவத்தை மறக்கமாட்டேன் என கூறியுள்ளார்.