ரஜினி முதல் அட்லீ வரை.. அம்பானி வீட்டு திருமணத்தில் கோலிவுட் பிரபலங்கள்.!

AnantRadhika Wedding - tamil Celebrities

ஆனந்த் அம்பானி : ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட்டுக்கும் நேற்று மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறுற்றது. இந்த திருமண விழாவிற்கு தென்னிந்திய திரையுலகின் மிகப்பெரிய நடிகர்கள் வருகை தந்ததால் மும்பையில் நட்சத்திர பட்டாளமே ஒன்று கூடிய தருணம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

மும்பை நகரத்தில் உள்ள அம்பானியின் ஜியோ வேர்ல்ட் டிரைவில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராம் சரண், மகேஷ் பாபு உள்ளிட்ட தென்னிந்திய சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

அதிலும் குறிப்பாக கோலிவுட்டில் இருந்து, நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி, மகள் சௌந்தர்யா, மருமகன் மற்றும் பேரனுடன் கலந்துகொண்டார். மேலும், ரஜினி மணமக்களுடன் இந்தி பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்ந்து, சூர்யா பட்டு வேஷ்டி, சட்டையுடன் தனது மனைவி ஜோதிகாவுடன் பங்கேற்றார்.

மேலும், பட்டு சேலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், பட்டு வேஷ்டியில் அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டனர்.

தகதகன்னு மின்னும் பிங்க் நிற உடையில் அட்லீ மற்றும் மனைவி பிரியா வருகை தந்தனர்.

 

விழாவில் கிளாஸாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனது மனைவியுடன் கலந்த கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்