இனிமேல் நான் தான் டாப்…குவியும் பட வாய்ப்புகள்..கோலிவுட்டை அதிரவைத்த த்ரிஷா.!!
பொன்னின் செல்வன் 1 திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ரி என்ட்ரி கொடுத்த த்ரிஷா தற்பொழுது கோலிவுட்டில் பல பெரிய படங்களில் நடிக்க கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் நடித்துவரும் லியோ திரைப்படத்தில் இணைந்தார்.
இதனை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ள விடாமுயற்சி திரைப்படத்திலும் திரிஷாவை தான் அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த தகவல் எல்லாம் நமக்கு தெரிந்த ஒன்றுதான் ஆனால் தற்பொழுது மீண்டும் ஒரு பெரிய நடிகருடன் திரிஷா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது வேற யாரும் இல்லை நடிகர் தனுஷ் தான்.ஆம், நடிகர் தனுஷ் நடிக்க உள்ள அவருடைய 50 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க திரிஷாவிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியையும் படியுங்களேன்- ஒரு எதிர்பார்ப்பும் கிடையாது..2 படமும் ஓடுனா மட்டும் தான் பார்ப்பேன்…பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்.!!
இதற்கான பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனுஷிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கொடி திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக தனுஷுடன் அவர் இணையப் போவதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்களில் நடிக்க த்ரிஷா கமிட் ஆகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், திரிஷாவின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், த்ரிஷா நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.