‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை நாளை வெளியாகும் திரைப்படங்கள்.!

Lover - Lal Salaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினி நடித்துள்ள ‘லால் சலாம்’ படமும், பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள ‘லவ்வர்’ படமும் நாளை வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த இரு படங்களின் டிரைலர்களும் நல்ல வரவேற்பை பெற்றதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லால் சலாம்

இயக்குனரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் வகையில், ‘லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கி உள்ளார் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த லால் சலாம் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

LalSalaam
LalSalaam [source – Lyca Productions]
லால் சலாம்: 45 நிமிட கேமியோ ரோலுக்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவா?

லவ்வர்

லவ்வர் திரைப்படத்தினை அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியுள்ளார். ந்த திரைப்படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் இணைந்து லவர் படத்தையும் தயாரிக்கின்றன. ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய , எடிட்டராக பரத் விக்ரமன் பணி புரிந்துள்ளார்.

கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான்! ‘லவ்வர்’ படத்துக்கு குவியும் பாராட்டுக்கள்!

Lover
Lover [source – Million Dollar Studios]
இமெயில்

முருக அசோக் கதாநாயகனாக நடிக்கும் ‘இமெயில்’ படத்தில் ராகினி திவேதி கதாநாயகியாக நடிக்கிறார். பெங்காலி மற்றும் ஹிந்தி திரையுலகில் பிரபலமான நடிகை ஆர்த்தி ஸ்ரீ இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார்.

மாஃபியாவின் வலையில் இருந்து எப்படி வெளியேறுகிறார் என்பதுதான் படத்தின் கதை. ஹுடுகிஎஸ்ஆர் பிலிம் ஃபேக்டரி பேனரின் கீழ் எஸ்ஆர் ராஜன் தயாரிக்கிறது. தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்ட இருமொழித் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.

Email movie
Email movie [source – SRFilmFactory]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation