‘கொட்டுக்காளி’ முதல் ‘டிமான்டி காலனி 2’ வரை ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் .. மிஸ் பண்ணிடாதீங்க.!

demonte colony - kottukkaali

சென்னை : சினிமா விரும்பிகளுக்கு இது  செம்மயான வாரம் என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்த வார வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) த்ரில்லர் முதல் மனதைக் கவரும் படங்கள் வரை நாளை OTT தளங்களில் வெளியாகும்திரைப்படங்கள் குறித்து  பார்க்கலாம்.

கொட்டுக்காளி

நடிகர் சூரி நடிப்பில் வெளியான “கொட்டுக்காளி” திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை (செப்டம்பர் 27) வெளியாகிறது. படம் ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெற்றி பெற்றது மற்றும் பாஸிடிவ் விமர்சனங்களை பெற்றது.

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான இந்தபடத்தை எஸ்.கே புரொடக்ஷன்ஸ் பேனரில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படம் 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

டிமான்டி காலனி 2

நடிகர் அருள்நிதி நடிப்பில் ஹாரர் திரில்லரில் உருவான ‘டிமான்டி காலனி 2’ நாளை (செப்டம்பர் 27) ZEE5 இல் ரிலீஸாகிறது. இயக்குநர் அஜய் ஞானமுத்து எழுதி இயக்கியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது.

படத்தில் பிரியா பவானி சங்கர், ஆன்டி ஜாஸ்கெலைனன், செரிங் டோர்ஜி, அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலித் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சரிபோதா சனிவாரம்

நடிகர் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சரிபோதா சனிவாரம்’ திரைப்படம் OTT பிரீமியருக்கு தயாராகி வருகிறது. இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கிய இத்திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளிலும் இன்று வெளியாகியிருக்கிறது.

முக்கிய வேடத்தில் நானி தவிர, இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், அபிராமி, முரளி சர்மா மற்றும் சாய் குமார் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, முரளி ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஸ்ட்ரீ 2:

ஸ்ட்ரீ 2 படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான ஹிந்தி மொழி நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமாகும். இயக்குநர் அமர் கௌஷிக் இயக்கிய இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.563.17 கோடியை ஈட்டியுள்ளது.

படத்தில், ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், அபர்சக்தி குரானா, அபிஷேக் பானர்ஜி மற்றும் பங்கஜ் திரிபாதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மடாக் பிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

பிரதிநிதி 2

நடிகர் நாரா ரோஹித் நடித்த  ‘பிரதிநிதி 2’ திரைப்படம் நாளை (செப்டம்பர் 27 ஆம் தேதி) ஆஹா ஓடிடி-யில் ரிலீஸாகிறது. மூர்த்தி தேவகுப்தாபு எழுதி இயக்கிய அரசியல் கலந்த திரில்லர் தெலுங்கு திரைப்படம் இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

மேலும் இந்த படத்தில் சிரி லெல்லா, தினேஷ் தேஜ், ஜிஷு சென்குப்தா மற்றும் சச்சின் கேத்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். வனரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனர் தயாரிப்பில் வெளியான இப்படம், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
bcci
mysskin - Aruldoss
seeman ponmudi
RN Ravi - Congress
ADMK - EPS
magizh thirumeni