கைதி 2 முதல் வேட்டையன் ரிலீஸ் தேதி வரை… இன்றைய சினிமாவின் ருசிகர செய்திகள்!
சென்னை : கைதி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது முதல் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி வரை பல அப்டேட்டுகள் வெளியாகி இருக்கிறது. எனவே, ஆக 19 இன்றைய நாளின் முக்கிய சினிமா தகவல்களை இந்த பதிவில் நாம் காணலாம்…
கைதி 2 அப்டேட்
கைதி படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அதற்கான அப்டேட் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியை வைத்து கூலி படத்தினை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக கைதி 2 படத்தினை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டுக்கு செல்லும் லோகேஷ்
லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தில் பிசியாக இருக்கும் நிலையில், அடுத்ததாக இந்த படத்தை முடித்துவிட்டு கைதி 2 படத்தினை தொடங்கயிருக்கிறார். அந்த படத்தை முடித்த பிறகு அமீர்கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட்டுக்கு செல்லும் லோகேஷ் கனகராஜ்க்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தளபதி 69 படப்பிடிப்பு எப்போது?
விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 4-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாழை டிரைலர்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள வாழை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான டிரைலர் இன்று வெளியாகவுள்ளது.
ட்ரெண்டிங்கில் கோட் டிரைலர்
விஜய் நடித்துள்ள கோட் படத்தின் டிரைலர் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆக 17-ஆம் தேதி வெளியான நிலையில், யூடியூப்பில் உலகளவில் முதல் 5 இடங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.
50 கோடியை தாண்டிய தங்கலான்
விக்ரம் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆக 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான தங்கலான் திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 56 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேட்டையன் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் லைக்கா அறிவித்துள்ளது. அதே தினத்தில் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.