Today Tamil Important Cinema News [file image]
சென்னை : கோட் படத்தின் டிரைலர் முதல் தங்கலான் 2 படம் குறித்த அப்டேட் வரை ஆக 17-ஆம் தேதி முக்கிய சினிமா செய்திகளை பற்றி பார்க்கலாம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘கோட் ‘ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கத்தில் , வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான ‘கல்கி 2898AD’ திரைப்படம் வரும் 22ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது! இந்தி மொழியில் EA NETFLIX-என்ற ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
தங்கலான் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 24 கோடி வரை வசூல் செய்திருந்த நிலையில், இரண்டாவது நாளில் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, மொத்தமாக வெளியான இரண்டு நாட்களில் 32 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது நித்யா மேனனுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷ் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” திருச்சிற்றம்பலம் குழுவினருக்கு வாழ்த்துக்கள். ஷோபனாவாக நடித்த நித்யா மேனன் தேசிய விருதை வென்றது எனக்கு தனிப்பட்ட வெற்றி. அதைப்போல, ஜானி மாஸ்டருக்கும், சதீஷ் மாஸ்டருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.
அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றிய நிலையில், தற்போது சாம் சி.எஸ். இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். அதாவது, பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷும், பின்னணி இசைக்கு சாமும் ஒப்பந்தமாகியுள்ளனர்.
தங்கலான் படத்தின் முதல் பாகம் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படத்தின் இரண்டாவது பாகமும் விரைவில் வெளியாகும் என விக்ரம் அறிவித்துள்ளார். படத்தின் ப்ரோமோஷனுக்காக ஹைதராபாத்திற்கு சென்ற படக்குழுவினர் படம் பற்றி பேசி கொண்டு இருந்தார்கள். அப்போது மேடையில் விக்ரம் ” தங்கலான் முதல் பாகம் மக்களுக்கு ரொம்பவே பிடித்து இருக்கிறது. நான், இயக்குனர் ரஞ்சித், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் தங்கலான் 2 திட்டம் பற்றி பேசினோம். விரைவில் தங்கலான் 2 வரும்” என கூறினார்.
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…
பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…