Kalam Vellum Movie [File Image]
இந்த காலகட்டத்தில் இளைஞர்களின் மனதை கவரும் வகையில் காதல் படங்கள், அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட ஆக்சன் படங்கள் வரலாம். ஆனால், அந்த காலகட்டம் அதாவது 1970 காலகட்டத்தில் வெளிவந்த படங்களை போல இப்போது படங்கள் வருமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால், இந்த சமயம் எடிட் செய்வதற்கு பல தொழில் நுட்பங்கள் வந்துவிட்டது.
அந்த சமயம் எல்லாம் அப்படி கிடையாது, நிஜமாகவே நடித்துக்கொடுக்கவேண்டும் ஆக்சன் காட்சிகளும் நிஜமாகவே எடுக்கப்படும். அப்படி பல படங்கள் இதுவரை வெற்றிகளை பெற்று காலத்தால் அழிக்கமுடியாதவையாக இருக்கிறது. அதில் ஒரு திரைப்படம் எதுவென்றால், கடந்த 1970 -ஆம் ஆண்டு ஜெய் சங்கர் நடிப்பில் வெளியான கலாம் வெல்லும்.
இந்த கலாம் வெல்லும் திரைப்படத்தை மு. கர்ணன் என்பவர் இயக்கி இருந்தார். படத்தில் நடிகர் ஜெய்சங்கருக்கு ஜோடியாக சிஆர் விஜயகுமாரி நடித்திருந்தார். நாகேஷ், ஓஏகே தேவர், எம்ஆர்ஆர் வாசு, விஜய லலிதா, காந்திமதி, உஷா, சண்முகசுந்தரம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
படத்தின் கதை படி, ஏழை விவசாயியான வேலு (ஜெய் சங்கர் ) ஏழை விவசாயியான வேலு, நிலக்கிழார் பெரியராஜாவின் அட்டூழியத்தாலும், சுரண்டலாலும் தன் சகோதிரியை இழக்கிறார். பிறகு தனது சகோதரியின் மரணத்திற்கு பழிவாங்க, வேலு பெரியராஜாவின் அண்ணன் சின்னராஜாவை கொள்வார். பிறகு பெயராஜா அவரை கொள்ள முயல அதிலிருந்து தப்பிக்க விவசாயியான வேலு ஒரு கும்பலுடன் இணைகிறார்.
திடீரென தங்களுடைய கும்பலில் வேலு வந்ததை கண்டு அந்த கும்பல் முதலில் குழப்பமடைந்தது, ஆனால் அவரது தைரியமும் நல்ல குணமும் அவருக்கு அவர்களின் அன்பையும் மரியாதையையும் கொடுக்க அந்த கும்பல் அவரை ஏற்றுக்கொள்கிறது. பிறகு வேலு நரசிங்கத்திற்குப் பிறகு கும்பல் தலைவனாகிறான்.
பணக்காரர்களின் பணத்தை கொள்ளையடிப்பதும் ஏழைகளைக் காப்பாற்றுவதும் அவருடைய நோக்கம். தொடர்ந்து பெரியசாமியை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்து வருகிறார். வேலு தனது கிராமத்திற்குத் திரும்புவதற்காக மனைவி காத்திருப்பதை மறந்துவிடுகிறான். கடைசியாக வேலு பெரியராஜாவை பழிவாங்கி போலீசில் சரணடைகிறார். இது தான் படத்தின் மொத்த கதை இந்த சமயம் பார்ப்பதற்கு சற்று பழையதாக இருந்தாலும் கூட அந்த சமயம் இந்த கதையம்சம் முற்றிலும் புதிதாக இருந்தது.
அது மட்டுமின்றி படத்தில் ஹீரோயினாக நடித்த சிஆர் விஜயகுமாரி மிகவும் கவர்ச்சியாக நடித்திருப்பார். கவர்ச்சி முதல் கதை வரை இந்த படம் அந்த சமயம் மக்களுக்கு பிடித்துப்போக படத்தை கொண்டாடி தீர்த்தனர் என்றே கூறலாம். படத்திற்கு மிகப்பெரிய பக்க பலமாக அமைந்தது கதை ஒரு பக்கம் என்றால் மற்ற இரண்டு பக்கங்கள் சண்டை காட்சிகள் மற்றும் பாடல்கள் முக்கிய காரணம்.
படத்திற்கு இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார். பாடல்களை கண்ணதாசன் எழுதி இருந்தார். “எல்லோரும் திருடர்களே’ “மாலையிட்டோம் பொங்கலிட்டோம்” “பெண் ஒரு கண்ணாடி” ஆகிய பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டி எங்கும் ஹிட் ஆனது. அதைப்போல, படத்தின் சண்டை காட்சிகளை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது ஏனென்றால், அந்த படத்தை நாம் பார்த்தோம் என்றால் அந்த சமயம் இந்த மாதிரி எல்லாம் சண்டை காட்சி எடுக்கப்பட்டதா என ஆச்சரிய படும் வகையில் எடுக்கப்பட்டு இருக்கும்.
அந்த அளவிற்கு ஸ்டண்ட் மாஸ்டர் மாதவன் படத்தின் சண்டை காட்சிகளை செதுக்கி எடுத்து இருப்பார். குறிப்பாக படத்தில் ஜெய் சங்கர் வில்லனுடன் ஈடுபடும் சண்டை காட்சி எல்லாம் மறக்கவே முடியாத அளவிற்கு இருக்கும். இனிமேல் இதுபோன்று ஒரு படங்கள் வருமா என்பது சந்தேகம் தான். ஏனெனில், காலத்தால் அழியாத படமாக ‘காலம் வெல்லும்’ படம் இருக்கும்.
இந்த திரைப்படம் 53 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் திரையரங்குகளில் வெளியானது. 1970-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வெளியாக்க இன்றுடன் 53 ஆண்டுகள் ஆகிறது. மேலும், இயக்குனராக கலக்கி வந்த மு. கர்ணன் இந்த காலம் வெல்லும் படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளாகவும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…