LataMangeshkar : இசை குயில், பாரத ரத்னா முதல் மாநிலங்களவை எம்.பி வரை… லதா மங்கேஷ்கர் சாதனை துளிகள்….

Lata Mangeshkar

லதா மங்கேஷ்கர்,  இந்த பெயரை கேட்டவுடன் இவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சத்யா படத்தில் இப்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் வலையோசை எனும் பாடலை பாடியவர். இசை குயில் என பெயர் பெற்றவர் என்று நமக்கு தெரியும். இன்னும் பலர் இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றெல்லாம் நினைத்து இருப்பார்கள். தமிழகத்தில் பிறந்து பல்வேறு மொழிகளில் பாடல் பாடிவந்துள்ளார் என்றல்லாம் நினைத்திருப்பர்.

உண்மையில் அவர் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். அங்கு இந்தூரில் 1929ஆம் ஆண்டு செப்டம்பர் 28இல்  பிறந்தார். இவரது குடும்பமும் இசை குடும்பமாகும் . இவரது தந்தை தீனந்த் மங்கேஷ்கர் ஆவார். லதா மங்கேஷ்கர் இயற்பெயர் ஹேமா. இதுதான் அவர்கள் பெற்றோர் வைத்த பெயர்.

அதன் பிறகு 4 வயதில் பாடல் பாட துவங்கினார் சிறுமி ஹேமா. அப்பா நடத்திய லத்திகா எனும் நாடகத்தின் மேல் ஈர்ப்பு உண்டாகி லத்திகா எனும் நாடகத்தின் பெயரை சற்று திருத்தி லதா எனவும், அதன் பின்னால் தனது குடும்ப பெயரையும் சேர்த்து ‘லதா மங்கேஷ்கர்’ ஆனார்.

முதலில் மராத்திய மொழியில் பாட துவங்கி, அதன் பிறகு திரைப்படங்களில் பாட துவங்கி, தனது குரலால் இசை உலகை கட்டிப்போட்ட இவர் 36 மொழிகளில் பாடல் பாடியுள்ளார், மொத்தமாக சுமார் 30 ஆயிரம் பாடல்களை தனது வாழ்நாளில் பாடியுள்ளார் இந்தியாவின் ‘இசை குயில்’ லதா மங்கேஷ்கர்.

ரசிகர்கள் மனதை தனது இசை குரலால் கட்டிப்போட்ட லதா மங்கேஷ்கர் 1972, 1974, 1990 ஆகிய 3 ஆண்டுகளில் 3 தேசிய விருதுகளை இவர் வென்றுள்ளார்.  அதே போல 5 முறை மஹாராஷ்டிரா மாநில விருதுகளை பெற்றுள்ளார். அதில் 3 முறை பாடகளுக்காகவும் , 2 முறை கலைத்துறையில் சிறப்பு பங்களிப்புக்காகவும் வழங்கப்பட்டது. இவை உட்பட  பல்வேறு திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.

திரைத்துறை விருதுகளும், மாநில அரசு விருதுகளும் இசை குயில் லதா மங்கேஸ்கரை கௌரவித்தது போல, இந்திய அரசும் இசை குயிலை  பாராட்ட தவறவில்லை. 1969ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும்,  1989ஆம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருதும்,  1999ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும்,  2001ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதும் பெற்றுள்ளார்.

அதன் பிறகு, சுதந்திர தின விழாவில் கலைத்துறையினருக்கு வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது 2008ஆம் ஆண்டு லதா மங்கேஷ்கருக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டது. மேலும், 1999 நவம்பர் முதல் 2005 நவம்பர் வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் லதா மங்கேஷ்கர் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் சத்யாதிரைப்படத்தில் இளையராஜா இசையில் லதா மங்கேஷ்கர் திரைப்படத்தில் ‘வளையோசை கலகலவென’ என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் மூலம் தான் தற்போது வரை லதா மங்கேஷ்கர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளர் என்பது குறிப்பிடதக்கது

தமிழில், ஆனந்த் திரைப்படத்தில் ஆராரோ பாடல், என் ஜீவன் பாடுது  படத்தில் எங்கிருந்தோ அழைக்கும் உள்ளிட்ட ஒரு சில பாடல்களே தமிழில் பாடியுள்ளார். இருந்தும் இப்போது வரை மொழிகள் கடந்து தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

தனது இனிய குரலால் இசை உலகை கட்டிப்போட்ட இசைக்குயில் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துள்ளார். இறுதி காலத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி மும்பையில் தனியார் மருத்துவமனையில் தனது 92வது வயதில் உயிரிழந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்