AK62 முதல் தங்கலான் வரை… மொத்தம் ’18’ தமிழ் படங்களை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.!
ஓடிடி நிறுவனத்தில் முதன்மை இடத்தில் இருக்கும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பல பெரிய படங்களை வாங்கி OTT-யில் வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு (2023) மொத்தமாக 18 தமிழ் திரைப்படங்களை வாங்கியுள்ளதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் வாங்கிய படங்கள் :
அஜித் நடிக்கவுள்ள AK62,கார்த்தி நடிக்கும் ஜப்பான், தனுஷ் நடிக்கும் வாத்தி, விக்ரம் நடிக்கும் தங்கலான், ஆரியன்,சந்திரமுகி 2,இறைவன், இருகபற்று, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்,
மாமன்னன், லைக்கா நிறுவனம் தயாரிக்கும் 18,20,24 ஆகிய மூன்று படங்கள், ரிவால்வர் ரீட்டா, தலைகோதல்,வரலாறு முக்கியம், நாய் சேகர், கட்டாகுஸ்தி ஆகிய படங்களை இந்த ஆண்டு வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
????Sirappana tharamana sambhavangala inime thaan paaka porom ???? because:
AK62
Aaryan
Chandramukhi 2
Iraivan
Irugapatru
Japan
Jigarthanda Double X
Maamannan
Lyca Productions’ Production No. 18— Netflix India (@NetflixIndia) January 16, 2023
அது மட்டுமில்லாமல், மற்றோரு பெரிய படத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிடஉள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதனால் ஓடிடியில் படம் பார்க்கும் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
அந்த பெரிய படம் என்ன..?
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் மற்றோரு பெரிய படத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிடஉள்ளதாகவு அறிவித்த படம் எது வென்றால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “தளபதி 67” படம் தான். ஏனென்றால், கடந்த ஆண்டே பெரிய தொகைக்கு வாங்கியதாக தகவல்கள் பரவியது.
நேற்று எதற்காக அறிவிக்கவில்லை என்றால், இன்னும் தளபதி 67 படம் குறித்து பட தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு நெட்ஃபிளிக்ஸ் அறிவிக்கும் என கூறப்படுகிறது.