தளபதி-62 விஜயின் வைரலாகும் புதிய புகைப்படம்..!
பாக்ஸ் ஆபீஸ் கிங் மற்றும் அடுத்த சூப்பர் ஸ்டார் என அழைக்கபடும் தளபதி விஜய் தற்போது ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 62-வது படத்தில் நடித்து வருகிறாா். ரசிகா்களிடம் மிகப்பெரும் எதிா்பாா்ப்புகளுக்கிடையே இப்படத்தின் பட பிடிப்புகள் தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏ.ஆா் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீா்த்தி சுரேஷ் உட்பட பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றன.
இப்படம் குறித்து அவ்வப்போது வெளிவரும் புகைப்படங்களை பாா்க்கும் போது இது ஒரு சமூக பிரச்சனைகளை கொண்ட அரசியல் படமாக இருக்கலாம் என கருதபடுகிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியில் உள்ள நடிகா் விஜயின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.