விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான வீரமே வாகை சூடும் படம் ரசிகர்களுக்கு மத்தியில் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இவர் அடுத்ததாக அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்த்தில் “லத்தி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைன்யா நடிக்கிறார்.
இப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. படத்தில் நடிகர் பரத்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 7 -ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், முதலில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் தான் இசையமைப்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இசையமைப்பாளரை மாற்றம் செய்துள்ளார்கள்.
அதன்படி, இந்த லத்தி படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைக்கவுள்ளார். கடைசியாக விஷால் நடிப்பில் வெளியான சக்ரா மற்றும் வீரமே வாகை சூடும் படங்களுக்கு யுவன் தான் இசையமைத்திருந்தார்.
விஷால்-யுவன் கூட்டணியில் வெளியான தாமிரபரணி, சண்டைக்கோழி, திமிரு, இரும்புதிரை, அவன் இவன் ஆகிய படங்கள் ரசிங்கர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் ஆல்பத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகவுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…