கமல் மீது புகார்.!? விக்ரம் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.!

Default Image

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “விக்ரம்” திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான ” பத்தல பத்தல” என்ற பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலை அவரே எழுதி அனிருத் இசையில் கமலே பாடியிருந்தார். பாடலில் நிறைய அரசியல் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னும் இல்ல இப்பாலே.. என்று மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகாா் அளித்துள்ளார்.

புகாரில் “பத்தல பத்தல என்ற பாடலில் “கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே..காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே.. ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே…
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே” என மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் வரிகள் அமைந்துள்ளது எனவும்,

“குள்ள நரி மாமு, கெடுப்பதிவன் கேமு… குளம் இருந்தும் வலைதளத்துல ஜாதி பேசும் மீமு… ஊசி போடு மாமே வீங்கிடும் பம்-பே..”என்ற வரிகள் ஜாதிய ரீதியான பிரச்சனைகளை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது எனவும், உடனடியாக அந்த வரிகளை நீக்க வேண்டும் என இணையதளத்தின் மூலம் புகார் அளித்துள்ளனர்.

kamal-vikrammovie-glimpseposter

மேலும் , உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், விக்ரம் படம் விக்ரம் படத்திற்கு உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு படத்தை தடை செய்ய மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே படத்திற்கான ஃப்ரீ ப்ரோமோஷன் என்கிறது சினிமா வட்டாரம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்