மிக்ஜாம் புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மக்களுக்கு ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் டிசம்பர் 14 இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், மிக்ஜாம் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும். காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகின்ற 14.12.2023 அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.
வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் பல்துறை மருத்துவர்கள். பொதுமக்களின் நலன் காக்கும் இம்மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, புயலால் திணறி வந்த செங்கல்பட்டு மாவட்ட சித்தாமூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உதவிப் பொருட்களை வழங்கியுள்ளார்.
Happy Birthday ‘தலைவா’ – ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தனுஷ்!
இது மட்டும் இல்லாமல், தளபதி விஜய் மக்கள் இயக்கம் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைமை மற்றும் வடசென்னை மாவட்ட மாணவரணி இணைந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உணவு வழங்கினர்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…