ரஜினி பவுண்டேஷன் பெயரில் மோசடி: சைபர் கிரைம் வழக்கு பதிவு!
ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரை தவறாக பயன்படுத்தி பண மோசடி செய்த புகாரில் சைபர் கிரைம் வழக்குபதிவு செய்துள்ளது.
ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்று போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி பணமோசடி நடைபெற்றுள்ளது. சுமார், ரூ.2 கோடி வசூல் செய்து 200 பேர் குலுக்கள் முறையில் பரிசு வழங்கப்படுவதாக மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் பவுண்டேஷன் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ர் அளிக்கப்பட்டது. தற்போது, இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.