ஒரு படம் வெற்றி பெற நான்கு விஷயங்கள் தேவை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஒத்த செருப்பு படத்தை நடித்து இயக்கியுள்ள பார்த்திபனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷங்கள் தேவை.
அவை, ‘படத்தின் கரு புதிதாக இருக்க வேண்டும். இது வரை எவரும் சிந்திக்காததாக இருக்க வேண்டும். நல்ல கருத்து சொல்வதாக இருக்க வேண்டும்.’, ‘ குறைந்த பட்ஜெட்டில் இருக்க வேண்டும்.’, ‘யதார்த்தமாக இருக்க வேண்டும்.’, ‘நான்காவதாக நன்கு விளம்பரம் செய்ய வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த நான்கு விடயங்களும் பார்த்திபனின் படத்தில் உள்ளது என்றும், இப்படம் பல சாதனைகளை படைக்கும் என வாழ்த்தியுள்ளார்.