Categories: சினிமா

நல்ல வேலை தியேட்டருக்கு வரல! தனுஷ் படத்தை கலாய்த்த அமீர்!

Published by
பால முருகன்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாறன். இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். ஸ்ம்ருதி வெங்கட், மகேந்திரன், அமீர், சமுத்திரக்கனி, கிருஷ்ண குமார், வி ஜெயபிரகாஷ், ராம்கி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.

இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். திரையரங்குகளில் வெளியாகவிருந்த இந்த திரைப்படம் கடைசி நேரத்தில் சில காரணங்களால் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு ஓடிடியில் வெளியானது.

பருத்திவீரன் விவகாரம் : ஞானவேல் ராஜா மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போகும் அமீர்?

ஆனால், படத்தை எந்த அளவுக்கு கழுவி ஊற்றமுடியுமோ அதே அளவிற்கு மக்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய விமர்சனத்தை கூறி வந்தனர். அந்த அளவிற்கு படம் ஓடிடியில் வெளியாகியும் கூட விமர்சன ரீதியாக படு தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து, இந்த படத்தின் கதையை கேட்டவுடனே படம் சரியாக போகாது என தனுஷிடம் தான் கூறியதாக அமீர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அமீர் ” மாறன் படத்தில் நடிப்பதற்கு முன்பு படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னார். கதை கேட்டு முடித்த பிறகு எனக்கு இந்த படத்தில் நடிக்க முதலில் விருப்பமே இல்லை. பிறகு என்ன தனுஷ் கதை சரி இல்லை இதில் நடிக்கணுமா? என்று கேட்டேன். பிறகு அண்ண நீங்க பண்ணுங்க வாங்க என்று என்னை அழைத்தார்.  படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த ஒரே காரணம் தனுஷ் மட்டும் தான். சம்பள விஷயத்தில் எல்லாம் எனக்கு எந்த பிரச்சனையும் இந்த படத்தை வைத்து வரவில்லை. நான் கேட்ட சம்பளத்தை அப்படியே கொடுத்துவிட்டார்கள்.
ஆனால், இந்த படம் சரியாக வாராது என்று அப்பவே தெரியும். தனுஷ்கிட்டயும் நான் இதனை சொன்னேன். நல்ல வேலை படம் தியேட்டருக்கு வரவில்லை” என நக்கலாக கலாய்த்து பேசியுள்ளார் அமீர்.  மேலும், தனுஷ் மற்றும் அமீர் இருவரும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். அந்த படம் பெரிய அளவில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

120 ரன்கள் அடிக்க முடியுமா? ரிஷப் பண்ட்க்கு சவால் விட்ட மைக்கேல் வாகன்!

ஹைதராபாத் : லக்னோ அணி பலம் வாய்ந்த அணியான ஹைதராபாத் அணியை நேற்று வீழ்த்திய நிலையில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்…

19 minutes ago

மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் – பிரதமர் மோடி கவலை.!

டெல்லி : தாய்லாந்து, மியான்மரில் சக்தி வாய்ந்த லநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவானதாக தகவல்…

35 minutes ago

மியான்மர், தாய்லாந்தில் பயங்கர நிலநடுக்கம்… சுக்குநூறாய் நொறுங்கிய கட்டிடங்கள்.!

பாங்காக் : மியான்மரை தொடர்ந்து தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் இன்று காலை 11:50 மணியளவில் முதல் சக்தி…

1 hour ago

அதிமுக Vs திமுக என்பது தான் வரலாறு! விஜய் பேச்சுக்கு ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…

1 hour ago

“TVK vs DMK., மன்னராட்சி ஸ்டாலின்., சீக்ரெட் ஓனர் மோடி.,” பொதுக்குழுவில் விஜய் ஆவேசப் பேச்சு!

சென்னை : இன்று (மார்ச் 28) தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த…

3 hours ago

“விசிக-வை குளோஸ் பண்ண போறாங்க.,” திருமாவுக்கு அட்வைஸ் கூறிய ஆதவ்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்று…

3 hours ago