அடி தூள்.! தேசிய விருதை தட்டி சென்ற இசை அசுரன் ஜிவி.! குவியும் வாழ்த்துக்கள்….

Default Image

திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

அந்த வகையில், 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை டெல்லியில் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்து வருகிறது. 5 பிரிவுகளின் கீழ் 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2020 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பர் 31-ஆம் தேதி வரை திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கு தகுதி பெற்றவை.

இதில் சிறந்த தமிழ் இசையமைப்பாளருக்கான விருதை சூரரைப்போற்று படத்திற்கு இசையமைத்ததற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி இசைக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முறையாக ஜிவி பிரகாஷ் தேசிய விருதை வென்றுள்ளதால், அவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  இதனையடுத்து ஜிவிபிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் “ஒரு நாள் நீங்கள் அதை பெரிதாக்குவீர்கள். ஒரு நாள் நீ வெல்வாய்… ஒரு நாள் நீ நினைத்தபடி எல்லாம் நடக்கும். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்